தேர்தலுக்கு முன் ஜெயலலிதா சிறை செல்வார். சுப்பிரமணியசுவாமி

தேர்தலுக்கு முன் ஜெயலலிதா சிறை செல்வார். சுப்பிரமணியசுவாமி

Subramanian-Swamyதமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறை செல்வார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ள கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி தமிழக நிலவரம் குறித்து தனது கருத்துக்களை கூறினார். அவர் கூறியதாவ்து:

“ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அடுத்த மாதம் 10-ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிடும். இந்த வழக்கில் ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வார்.

.தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் அதிகரித்துவிட்து.  அவற்றை ஒடுக்குவதில் மாநில அரசு தவறிவிட்டது.

தீவிரவாத விஷயத்தில், திமுக, அதிமுக இரண்டுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை.  தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வரக்கூடும் என்பதை முன்கூட்டியே அனுமானிக்க முடியாது. ஆனால் அடுத்து வரவிருக்கும் புதிய அரசு, தீவிரவாத அமைப்புககளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன். மதத்தின் பெயரால் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. அப்படி ஒரு அரசு செயல்படுமானால் அதை கலைக்கவும் மத்திய அரசு தயங்கக் கூடாது

சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஜெயலலிதா சிறை செல்வார் என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது அதிமுகவினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுப்ரமணியன்சுவாமி மீது சட்டரீதியான நடவடிக்கைக்கு அதிமுக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
 

Leave a Reply