500 காளைகளுக்கு சிறப்பு பயிற்சி. ஜல்லிக்கட்டுக்கு தயாராகிறது அலங்காநல்லூர்
மாணவர்களின் புரட்சி போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டம் முழுவடிவில் இயற்றப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
மதுரை அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதியும், பாலமேட்டில் பிப்ரவரி 2-ஆம் தேதியும், அவனியாபுரத்தில் பிப்ரவரி 5ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாததால் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு எவ்வித பயிற்சியும் வழங்கப்படவில்லை. எனவே தற்போது போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளதால் காளைகளுக்கு முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அலங்காநல்லூர் போட்டியில் பங்கேற்கும் 550 காளைகளுக்கு தினமும் 3 வேளை பயிற்சிகள் மற்றும் உணவுகள் முறையாக வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த முறை ஜல்லிக்கட்டுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் காளைகளும், வீரர்களும் ஆக்ரோஷமாக மோதுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.