தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்ற வீரவிளையாட்டு பல நூறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிஅலியில் ஜல்லிக்கட்டு முறைபடுத்தும் சட்டம் சரியாக பின்பற்றப்படவில்லை என்று வனவிலங்குகள் நலவாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் ஜல்லிக்கட்டுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக் கட்டு பாதுகாப்பு நலச்சங்க செயலர் ஒண்டிராஜ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காலங்காலமாக நடந்துவரும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தற்போது பல இடங்களில் உச்சநீதிமன்றத்தின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும், ஒருசில இடங்களை விதிமீறல் இருந்தால், அந்த இடங்களில் மட்டும் தடை செய்யலாம் என்றும் அவர் கூறினார்.