சசிகலா தியாகியா? விஜயசாந்திக்கு ஜேம்ஸ் வசந்தன் கடும் கண்டனம்.

சசிகலா தியாகியா? விஜயசாந்திக்கு ஜேம்ஸ் வசந்தன் கடும் கண்டனம்.

பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான விஜயசாந்தி தமிழகத்தில் எடப்பட்டி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். வாழ்த்துக்களை மட்டும் கூறிவிட்டு அவர் நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்,. ஆனால் அவரது பேட்டியில் ஓபிஎஸ் அவர்களை துரோகி என்றும் சசிகலா ஒரு தியாகி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக என்ன நடக்கின்றது என்று தமிழகர்களுக்கு தெரியாதா? ஏற்கனவே மக்கள் கடந்த சனிக்கிழமை நடந்த கொடூரத்தை ஜீரணிக்க முடியாத நிலையில் இருக்கும்போது, விஜயசாந்தி கூறிய இந்த கருத்தால் கொந்தளித்துள்ளனர். விஜயசாந்தியை சமூகவலைத்தள பயனாளிகள் மிக கேவலமாக விமர்சித்து வருகின்றனர்

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது ஃபேஸ்புக்கில் ‘விஜயசாந்திக்கு பெரிய அரசியல் வித்தகர் என்ற நினைப்பா! கருத்துகளை உங்கள் மாநிலத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இது சினிமா அல்ல! எங்கள் வாழ்க்கை’ என்று கூறியுள்ளார்.

இவரை போல இன்னும் பலர் கூறியுள்ள கருத்துக்களை நாகரீகம் கருதி இங்கு பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. ஆனால் வாசகர்களாகிய உங்களுக்கு அந்த கட்டுப்பாடு இல்லை. கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் உங்கள் மனதில் தோன்றியதை பதிவு செய்யுங்கள்

Leave a Reply