ஜேம்ஸ்பாண்ட் ரிலீஸ் தேதி திடீர் தள்ளிவைப்பு: அதிர்ச்சி காரணம்
ஜேம்ஸ்பாண்ட் நடித்த அடுத்த திரைப்படமான ’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி இந்தியா உட்பட உலகம் முழுவதும் வெளியாக இருந்தது. இதற்கான புரமோஷன் பணிகள் கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
டேனியல் கிரேக் ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி திடீரென நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. குறிப்பாக சீனா ஜப்பான் தென் கொரியா ஈரான் உள்பட பல நாடுகளில் 90% திரையரங்குகள் செயல்படவில்லை என்றும் இதனால் ஜேம்ஸ்பாண்டின் படம் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது
இப்போதைக்கு நவம்பர் மாதம் 12ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸின் தாக்கம் நவம்பரில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து தான் அந்த ரிலீஸ் தேதியும் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஜேம்ஸ்பாண்ட் உள்ளிட்ட பல திரைப்படங்கள் திட்டமிட்டபடி வெளியாகாத நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
The film will be released in the U.K. on November 12, 2020 with worldwide release dates to follow, including the US launch on November 25, 2020.
— James Bond (@007) March 4, 2020
MGM, Universal and Bond producers, Michael G. Wilson and Barbara Broccoli, announced today that after careful consideration and thorough evaluation of the global theatrical marketplace, the release of NO TIME TO DIE will be postponed until November 2020. pic.twitter.com/a9h1RP5OKd
— James Bond (@007) March 4, 2020