எதிரும் புதிருமாக இருந்த கட்சிகள் ஒன்று சேர்ந்தன. காஷ்மீரில் புதிய ஆட்சி.

kashmirகாஷ்மீர் மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருந்த பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிடிபி கட்சி இடையே உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அங்கு புதிய ஆட்சி ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாக ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைத்த தேவையான தொகுதிகள் கிடைக்கவில்லை. பாரதிய ஜனதா 25 தொகுதிகளையும், பிடிபி கட்சி 28 தொகுதிகளையும் கைப்பற்றியது.

இந்நிலையில் நேற்று டெல்லி வந்த பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து இருவரும் ஆலோசனை செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமித் ஷா, காஷ்மீரில் பிடிபி-பாஜக கூட்டணி உறுதி என்று கூறினார்.

வரும் மார்ச் 1ஆம் தேதி அங்கு புதிய அரசு அமைக்கப்படும் என்றும் பிடிபி தலைவர் முப்தி முகமது சயீத் முதல்வராக பதவியேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாரதிய ஜனதா அமைச்சரவையில் பங்குபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவை அப்படியே நீடிக்க செய்ய வேண்டும் என்ற பிடிபி-யின் கோரிக்கையை பா.ஜனதா ஏற்றுக்கொண்டதாக தகவல்கள்

Leave a Reply