ஜம்மு காஷ்மீர்: பதவியேற்ற இரண்டே நாட்களில் அமைச்சர் ராஜினாமா? பெரும் பரபரப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் முப்தி முகமது சயீத் திடீரென மரணம் அடைந்ததை அடுத்து அங்கு அரசியல் சூழ்நிலை சரியாக சில மாதங்கள் ஆயிற்று. இந்நிலையில் முப்தி முகமது சயீத்தின் மகள் மெஹ்பூபா தலைமையிலான புதிய அரசு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் பதவியேற்றது. இந்நிலையில் பதவியேற்ற இரண்டே நாட்களில் அமைச்சர் ஒருவர் திடீரென ராஜினாமா செய்தது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெஹ்பூபா தலைமையிலான புதிய அரசில் பிரிவினைவாத மூத்த தலைவர் அப்துல் கனி லோனே அவர்களுக்கு சமூக நலத்துறை ஒதுக்கப்பட்டது. அவரும் இந்த துறையை ஒப்புக்கொண்டு பதவியேற்றார். ஆனால் தற்போது அவர் சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறையை எதிர்பார்ப்பதாகவும் இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அவர் திடீரென ராஜினாமா செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆனால் ராஜினாமா கடிதத்தை முதல் மெஹ்பூபாவுக்கு அவர் அனுப்பவில்லை என்றும் அதற்கு பதிலாக பாஜக தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்துல்கனியை சமாதானப்படுத்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.,