ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மும்பதி முகம்து சையீத் மரணம். அடுத்த முதல்வர் யார்?
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சையீத், இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 79. மரணம் அடைந்த ஜம்மு காஷ்மீர் முதல்வருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சையீத்தின் மகள் மெகபூபா பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சையீத் அவர்களுக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக எய்ம்ஸ் மருத்துவர்கள் அவருக்கு செயற்கை சுவாசம் அளித்தும் சிகிச்சையின் பலனின்றி இன்று காலை முஃப்தி முகமது உயிர் மருத்துவமனையிலேயே பிரிந்தது.
கடந்த 1998-ம் ஆண்டு மக்கள் ஜனநாயக கட்சியைத் தொடங்கிய முஃப்தி முகமது சையீத், 2002-ம் ஆண்டு முதல் 2005 வரை காஷ்மீர் முதல்வராக பதவி வகித்துள்ளார்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து காஷ்மீரில் ஆட்சியைப் பிடித்தது மக்கள் ஜனநாயக கட்சி. இதையடுத்து, 2015-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி காஷ்மீர் மாநில முதல்வராக சயீத் மீண்டும் பதவி ஏற்று கொண்டார். முஃப்தி முகமது சையீத், வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
Chennai Today News: Mufti passes away: A great statesman, provided healing touch to J&K, says PM Modi