மீண்டும் ஜம்மு காஷ்மீரில் பதட்டம். திறக்கப்பட்ட பள்ளிகளை மூட உத்தரவு
ரூபாய் நோட்டு பிரச்சனையால் ஓரளவுக்கு அமைதி திரும்பிய ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பதட்டம் தொடங்கியுள்ளதாகவும், இதன் காரணமாக திறக்கப்பட்ட 300 பள்ளிகளை மீண்டும் மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ஊரடங்கு உத்தரவு உள்பட பல சோதனைகளை சந்தித்து வந்த ஜம்மு காஷ்மீர் மக்கள் சமீபத்தில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற நடவடிக்கையால் தீவிரவாதிகளின் தொல்லை இல்லாமல் அமைதியாக இருந்தது. இதன் காரணமாக நீண்ட நாட்களாக மூடியிருந்த பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது மீண்டும் எல்லையில் தீவிரவாதிகள் தாக்க தொடங்கியுள்ளதால் பூஞ்ச் எல்லையில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் பள்ளிகள் மூட அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.