மக்கள் சுய ஊரடங்கு காலம் மேலும் நீடிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின்படி இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுயஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை தொடரும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கொரோனா நோய் பரவுவதை தடுக்க இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து மேற்கொண்ட இந்நிகழ்வில் பல்வேறு தரப்பு மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இரவு 9 மணிக்கு நிறைவேற உள்ளது
இந்த ஊரடங்கு நிகழ்வில் மக்களின் நலன் கருதி நாளை காலை 5 மணி வரை தொடரும் என அறிவிக்கப்படுகிறது. இருப்பினும் அத்தியாவசிய பணிகள் தொடர்ந்து நடைபெற எந்த தடையும் இல்லை என தெளிவு படுத்தப்படுகிறது. இதற்கு முழு ஒத்துழைப்பு நல்க பொதுமக்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பொதுமக்கள் நலன் கருதி ஊரடங்கு நிகழ்வு நாளை (23.3.2020) காலை 5 மணி வரை தொடரும்.
ஊரடங்குக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.#JanataCurfew #TamilNadu #TNGovt #TN_Together_AgainstCorona pic.twitter.com/MoePtykViE
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 22, 2020