பெற்றோரால் காட்டில் விடப்பட்ட ஜப்பான் சிறுவன் 6 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்பு

பெற்றோரால் காட்டில் விடப்பட்ட ஜப்பான் சிறுவன் 6 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்பு

japan boyவீட்டில் அதிக சேட்டை செய்ததாக 7 வயது சிறுவனை அடர்ந்த காட்டில் விட்டுவிட்டு வந்த பெற்றோர்கள் பின்னர் மனம் மாறி மீண்டும் காட்டில் தேடச்சென்ற போது சிறுவனை காணாமல் திடுக்கிட்டனர். இந்த சம்பவம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ஜப்பானில் நடந்தது.

காணாமல் போன சிறுவனை தேட மீட்புப்படையினர் இரவுபகலாக ஒருவாரம் அடர்ந்த காட்டில் தேடினர். அவர்கள் தேடிய பாதையில் கரடியின் காலடி இருந்ததால் சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என அஞ்சப்பட்டது.

இந்த சம்பவம் ஜப்பான் நாட்டையே அச்சபடுத்திய நிலையில் தற்போது அந்த சிறுவன் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளான். காட்டில் ராணுவ பயிற்சி மையத்தில் வீரர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள குடிலில் கடந்த ஆறு நாட்களாக அந்த சிறுவன் சரியான உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் இருந்ததாகவும், மீட்புப்படையினர் சிறுவனை கண்டுபிடித்தவுடன் உடனடியாக தண்ணீர் மற்றும் உணவு கொடுத்ததாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பின்னர் பெற்றோர்களுடன் அந்த சிறுவன் முறைப்படி ஒப்படைக்கப்பட்டான். பெற்றோருடன் மகன் ஒப்படைக்கப்படும் காட்சியும், சிறுவனை விட்டுச் சென்றதற்காக தந்தை மன்னிப்பு கேட்கும் காட்சியும், ஜப்பான் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. ஆபத்தான காட்டிலிருந்த சிறுவன் மீட்கப்பட்டு, பெற்றோருடன் இணைந்த சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், சிறுவனைக் கண்டிப்பதற்காக பெற்றோர் மிகக் கடுமையாக நடந்து கொண்டதாகப் பலர் அதிருப்தி தெரிவித்தனர்.

Chennai Today News: Japan: 7-year-old boy found after week’s disappearance

Leave a Reply