ஜப்பானிய பெண்கள் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம். சுற்றுலாத்துறை எச்சரிக்கை

ஜப்பானிய பெண்கள் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம். சுற்றுலாத்துறை எச்சரிக்கை

japan

புத்தகயாவில் ஜப்பானிய பெண் ஒருவர் கடந்த ஐந்து மாதங்களாக, ஐந்து நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து ஜப்பானிய சுற்றுலாத்துறை அந்நாட்டு மக்களுக்கு, இந்தியாவுக்கு பெண்கள் தனியாக செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானை அடுத்து சீனாவும் தனது நாட்டு மக்களை எச்சரித்துள்ளதால் உலக அளவில் இந்தியாவின் மானம் கப்பலேறிக்கொண்டு வருகிறது.

22 வயது ஜப்பான் பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு தனியாக இந்தியா வந்து பல்வேறு இடங்களில் தங்கி, தனது ஆராய்ச்சியை நடத்தியுள்ளார். இந்நிலையில் அவர் தனது ஆராய்ச்சி குறித்து புத்தகயாவுக்கு வந்தபோது அவரை ஐந்து நபர்கள் கடத்தி தங்களுடைய கட்டுப்பாட்டில் சுமார் ஐந்து மாதம் வைத்து தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 26ஆம் தேதி அவர்களிடம் இருந்து தப்பித்த ஜப்பானிய பெண் பின்னர் அங்குள்ள காவல்நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் ஜப்பானை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்துள்ள ஜப்பானிய சுற்றுலாத்துறை, ஜப்பானிய பெண்கள் தனியாக இந்தியாவுக்கு சுற்றுலாப்பயணம் செய்யவேண்டாம்’ என்று எச்சரித்துள்ளது.

Leave a Reply