பூட்டு, சாவி இல்லாத முழுக்க முழுக்க ரோபோக்களால் இயங்கும் ஓட்டல்

பூட்டு, சாவி இல்லாத முழுக்க முழுக்க ரோபோக்களால் இயங்கும் ஓட்டல்

japanஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ‘விசித்திர ஓட்டல்’ என்ற பெயரில் விசித்திரமான ஒரு ஓட்டல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் மனிதர்கள் யாரும் வேலை செய்யவில்லை. முழுக்க முழுக்க ரோபோக்களே வேலை செய்கின்றன.

இந்த ஓட்டலின் ரிசப்ஷனில் இருந்து வாடிக்கையாளர்களின் பெட்டியை தூக்கி செல்லும் பணியாளர்கள் வரை அனைவருமே ரோபோக்கள்தான். இந்த ஓட்டலின் அறைகளுக்கு பூட்டு, சாவிகள் கிடையாது. வாடிக்கையாளர்கள் முகத்தை கதவருகே காண்பித்தால் போதும் கதவு திறக்கும். மேலும் இந்த ஓட்டலின் அறைகளின் உள்ள மின்சார பல்புகள் மனித நடமாட்டத்திற்கு ஏற்றபடி ஆட்டோமெட்டிக்காக எரியும், அணையும்.

டோக்கியோ பல்கலைகழகத்தின், கவாஸோ ஆய்வகம் மற்றும் கஜிமா நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஓட்டலில் 72 அறைகள் உள்ளது. ஒருநாள் வாடகை 72 அமெரிக்க டாலரில் இருந்து தொடங்குகிறது. இந்த ஓட்டலில் தங்குவதற்கு வாடிக்கையாளர்கள் பெருமளவில் முன்வருவதாக ஓட்டலின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply