2ஆம் உலகப்போருக்கு பின்னர் ஜப்பான் நிறைவேற்றும் புதிய சட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு.

2ஆம் உலகப்போருக்கு பின்னர் ஜப்பான் நிறைவேற்றும் புதிய சட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு.
japan
ஜப்பானின் முப்படைகளும் தற்காப்புக்காக மட்டுமே என்ற நிலையை மாற்றி, வெளிநாடுகளிலும் போர் புரிவதற்கு வகை செய்யும் புதிய சட்ட மசோதா ஒன்று ஜப்பான் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. 70 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவேற்றப்படும் இந்த சர்ச்சைக்குரிய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜப்பானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் அரசு தரப்பில் இருந்து இந்த சட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டபோது, “இந்தப் புதியச் சட்டத்தின் மூலம், ஜப்பான் மக்களின் பாதுகாப்பு  மட்டுமின்றி, நட்பு நாடுகளை பாதுகாப்புகாகவும் ஜப்பானியப் படைகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். மேலும் இதுவரை ஜப்பானியப் போர் விமானங்கள், தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் தரும் எதிரி விமானங்கள், ஏவுகணைகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க மட்டுமே முடியும். ஆனால் தற்போது இந்தப் புதிய பாதுகாப்புச் சட்டத்தின்மூலம், எதிரி நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விமானங்கள், ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்கும் அதிகாரம் ஜப்பான் போர் விமானங்களுக்கு அளிக்கப்படும்.

இதுகுறித்து நாடாளுமன்ற மேலவைத் தலைவர் மாஸாக்கி யமஸாகி செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது””பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவாக 148 எம்.பி.க்களும், எதிராக 90 எம்.பி.க்களும் வாக்களித்தனர்” என்றார்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியடைந்த பிறகு, அந்த நாட்டின் முப்படைகளும் நாட்டின் தற்காப்புக்காக மட்டுமே செயல்படும் வகையில் அரசியல் சாசனம் மாற்றியமைக்கப்பட்டது. பிற நாடுகள் மீது போர் தொடுக்கவும், அன்னிய மண்ணில் போர் புரியவும் அந்த நாட்டுப் படையினருக்குத் தடை விதிக்கப்பட்டது. போரால் பெரும் அழிவைச் சந்தித்திருந்த ஜப்பானின் பெரும்பாலான மக்கள், இந்த அமைதிப் பாதைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகள் ஜப்பானை அச்சுறுத்தி வருவதாகவும், அதனால் நாட்டின் ராணுவ நிலைப்பாட்டை வலுப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் ஷின்úஸா அபே கூறி வருகிறார்.

ஜப்பானின் ராணுவக் கரங்களை வலுப்படுத்தும் வகையில் அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தப் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

எனினும், இந்த மசோதா நாட்டின் அரசியல் சாசனத்துக்கும், பொதுமக்களின் விருப்பத்துக்கும் எதிரானது எனக் கூறி எதிர்க் கட்சியினரும், பொதுநல ஆர்வலர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply