சானிடைசர் பற்றாக்குறை எதிரொலி

வோட்காவை பயன்படுத்தும் ஜப்பான் மக்கள்

ஜப்பானில் சானிடைஸர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் சானிடைசருக்கு பதில், வோட்காவை பயன்படுத்த ஜப்பான் அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அடிக்கடி கை கழுவ வேண்டும் அல்லது சானிடைசரால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் சானிடைஸர்களுக்கு உலகம் முழுவதும் கடும் கிராக்கி ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் சானிடைஸர்களுக்கு பதிலாக ஆல்ஹகாலை பயன்படுத்த ஜப்பான் அரசு தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஆல்கஹாலில் ஒருவகையான வோட்காவை தேர்வு செய்திருக்கும் ஜப்பான் அரசு, அதை தண்ணீரில் கலந்து சானிடைசர் போல் பயன்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளது.

Leave a Reply