ஜப்பான் பிரதமருடன் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே முக்கிய பேச்சுவார்த்தை.

vasundhara_abe_759ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே 5 நாள்கள் அரசு முறைப் பயணமாக கடந்த சனிக்கிழமை ஜப்பானுக்கு பயணம் செய்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர் வசுந்தரா ராஜே, நேற்று அவர் டோக்கியோவில் அந்நாட்டு பிரதமர் ஷிஷ்னோ அபே அவர்களை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது ஜப்பானிய நிறுவனங்கள் முதலீடு செய்ய ராஜஸ்தான் ஏற்ற மாநிலமாக விளங்குவதாகவும் அதிலும் குறிப்பாக மாநிலத்தலைநகர் ஜெய்பூரில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆழ்வார் மாவட்டத்தின் நீம்ரானா பகுதியில் 1,167 ஏக்கர் நிலம் தொழிற்சாலைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த பகுதியில் ஜப்பானை சேர்ந்த நிஷின்பிரேக், மைடெக்ஸ் பாலிமர், நிப்பான்பைப்,டைகின், உட்பட 45 நிறுவனங்கள் சுமார் 4 ஆயிரத்து 200 கோடி அளவிற்கு முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜப்பான் நாட்டின் உதவியுடன் செயல்படு்ததப்பட்டு வரும் குடிநீர் திட்டம் குறித்து ஜப்பான் பேங்க் ஆப் இண்டர்நேஷனல் தலைவர் ஹிரோஷிவான்டன் அபே மற்றும் வெளிவிவகார வர்த்தக அமைப்பின் தலைவர் ஹிரோயுஹிஇஷிஜி ஆகியோரையும் முதல்வர் வசுந்தரா ராஜேசந்தித்து பேசினார்.

Leave a Reply