காதலில் விழுந்த ஜப்பான் மன்னரின் பேத்தி. ராஜவாழ்க்கையை இழக்கின்றார்.

காதலில் விழுந்த ஜப்பான் மன்னரின் பேத்தி. ராஜவாழ்க்கையை இழக்கின்றார்.

ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ அவர்களின் பேத்தியும் இளவரசியுமான மேக்கோ என்பவர் விரைவில் திருமணம் செய்யவுள்ளார். அவர் தன்னுடன் படிக்கும் ஒரு ஏழை மாணவரை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜப்பான் மன்னர் பரம்பரையை சேர்ந்த ஒருவர் மன்னர் பரம்பரை இல்லாத ஒருவரை திருமணம் செய்தால் அவர் சொகுசான ராஜவாழ்க்கையை இழப்பார். ஆனால் அதற்கும் தயாராகிவிட்டார் இளவரசி மேக்கோ. தனது தாத்தா மற்றும் பெற்றோர்களிடம் சம்மதம் பெற்றுவிட்ட இளவரசி மேக்கோ விரைவில் தனது காதலரை திருமணம் செய்யவுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இளவரசியின் காதலர் கெய் கொமாரோ என்பவர் ஜப்பான் கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கைடு பணி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் வயலின் மற்றும் சமையல் கலையில் வல்லவர் என்று கூறப்படுகிறது.

Leave a Reply