ஜப்பானும், தென்கொரியாவும் அணு ஆயுதங்களை தயாரிக்க அனுமதிக்கலாம். டொனால்ட் டிரம்ப்

ஜப்பானும், தென்கொரியாவும் அணு ஆயுதங்களை தயாரிக்க அனுமதிக்கலாம். டொனால்ட் டிரம்ப்
donald
வடகொரியா நாட்டில் அணு ஆயுதம் தயாரிக்கவும், அணு ஆயுதங்களை சோதனை செய்யவும் அமெரிக்கா எதிர்த்து வரும் நிலையில் வடகொரியாவின் பகைமை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அணு ஆயுதங்கள் தயாரிக்க அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். தற்காப்புக்காக ஜப்பானும், தென்கொரியாவும் அணு ஆயுதங்களை தயாரிக்க அனுமதிக்கலாம் என்று அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளதை அடுத்து குடியரசு கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்ப் அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவின் விஸ்கான்சின் என்ற மாகாணத்தில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் பங்கேற்ற டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:

ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் கொள்கையாக உள்ளது. ஆனால் இவையெல்லாம் மாறும் காலம் வரலாம். ஏனெனில் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட பல நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. மேலும் ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு முட்டாள்தனமான முடிவு. இதன் மூலம் அந்த நாடு அடுத்த 10 ஆண்டுகளில் அணு ஆயுதத்தை தயாரிக்கப்போகிறது.

இந்நிலையில், ஜப்பான், தென் கொரியாவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்குவதைவிட, வட கொரியாவிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அணு ஆயுதங்களை தயாரித்துக் கொள்ள அந்த நாடுகளை அனுமதிக்கலாம் என்பது என்னுடைய கருத்து. அதேநேரம், அணு ஆயுதங்கள் பரவுவதை அனுமதிக்கக் கூடாது’ என்று கூறினார்.

Chennai Today News:  Japan, South Korea, & Donald Trump’s Foreign Policy

Leave a Reply