ஜப்பான் டாய்லெட்டில் ஸ்மார்ட்போன் பேப்பர்

ஜப்பான் டாய்லெட்டில் ஸ்மார்ட்போன் பேப்பர்

டாய்லெட்டில் இருக்கும்போது பலர் ஸ்மார்ட்போனை உபயோகித்து வருவதாக செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் டாய்லெட்டில் ஸ்மார்ட்போனை உபயோகித்தால் டாய்லெட்டில் உள்ள கண்ணுக்கு தெரியாத கிருமிகள் ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனில் ஒட்டிகொண்டு பின்னர் அது நமக்கு நோயை உண்டாக்கும் என்று அறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜப்பான் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் ஜப்பான் நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் டாய்ல்ட் பேப்பருக்கு அருகில் ஸ்மார்ட்போன் துடைக்கும் பேப்பரையும் வைத்துள்ளது.

கிருமிநாசினியுடன் கலந்துள்ள இந்த பேப்பரால் ஸ்மார்ட்போனை துடைத்து கொண்டால் அதில் ஏதாவது கிருமிகள் இருந்தால் நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply