போகிமான் கோ விளையாட்டால் உயிரிழந்த ஜப்பான் நபர். திடுக்கிடும் செய்தி

போகிமான் கோ விளையாட்டால் உயிரிழந்த ஜப்பான் நபர். திடுக்கிடும் செய்தி

pokemanகடந்த ஜூலை மாதத்தில் அறிமுகமான போகிமான் கோ என்ற வீடியோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் அடிமையாகி உள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் இந்த விளையாட்டை ஆர்வத்துடன் விளையாடி வரும் நிலையில் இந்த விளையாட்டை சிலர் சாலையில் செல்லும்போதும் விளையாடுவதால் நிறைய விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. ஒருசில உயிரிழப்புகளும் இதனால் நேர்ந்துள்ளது.

இந்நிலையில் ஜப்பான் நாட்டின் டோகுஷிமா என்ற பகுதியில் நேற்று மாலை போக்கிமோன் கோ விளையாட்டில் செல்போனில் விளையாடியபடியே லாரி டிரைவர் லாரியை ஓட்டி வந்த அவர் திடீரென நிலைதடுமாறி, சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த மூன்று பேர் மீது லாரியை பயங்கரமாக மோதினார். இந்தவிபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான செய்திகள் ஜப்பான் ஊடகங்களில் பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் போக்கிமோன் கோ விளையாட்டை அறிமுகப்படுத்திய ’நியான்ட்டிக்’ நிறுவனம் இச்சம்பவம் குறித்து அறிக்கை ஏதும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த கேமை அறிமுகப்படுத்தியபோதே கொடுத்த வார்னிங்களில் சாலையில் செல்லும்போது இந்த விளையாட்டை விளையாட வேண்டும் என்ற ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply