ரூ.700 கோடி செலவில் ஆந்திர சட்டமன்ற, உயர்நீதிமன்ற கட்டிடங்களை கட்டுகிறது ஜப்பான் நிறுவனம்

ரூ.700 கோடி செலவில் ஆந்திர சட்டமன்ற, உயர்நீதிமன்ற கட்டிடங்களை கட்டுகிறது ஜப்பான் நிறுவனம்

amaravathiஆந்திர மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்ட பின்னர் அவருடை முதல் கனவாக இருந்தது புதிய தலைநகரம்.தான். இதற்காக குண்டூர் அருகே உருவாக்கப்பட உள்ள நகரம்தான் அமராவதி. ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் தொழில்நுட்பத்தில் மிக விரைவில் தலைநகர் அமராவதி அமையவுள்ளது. 900 ஏக்கரில் ரூ.700 கோடி செலவில் அமையவுள்ள இந்த தலைநகர் அமராவதியில் சட்ட மன்றம், தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம் ஆகியவை கட்டப்படவுள்ளன.

இந்த கட்டிடங்களை கட்டும் ஒப்பந்தங்களை எடுக்க ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகள் போட்டி போட்டு வரும் நிலையில் தற்போது இந்த ஒப்பதங்களை ஜப்பான் நாட்டின் ‘4 மிசிக்கோ மக்கி அண்ட் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்திற்கு ஆந்திர அரசு அளித்துள்ளது. இந்த நகரம் கட்டி முடிக்கப்பட்டவுடன் உலகின் சிறந்த 10 நகரங்களில் ஒன்றாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நகரத்தை அமைக்க அந்த பகுதியின் விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து அரசிடம் தங்கள் இடங்களை கொடுக்க முன்வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவின் மிக பிரமாண்டமான சட்டமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களை அமைக்கும் பிளான்களை ஜப்பான் நிறுவனம் அமைத்து வருகிறது.

Leave a Reply