ஜப்பான் பாராளுமன்ற தேர்தல். ஆளுங்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு.

japan electionஜப்பானில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற்றது. காலை ஏழு மணிக்கு ஆரம்பமான வாக்குபதிவு மாலை 4.30 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்ததாக கூறப்படுகிறது.

475 உறுப்பினர்களை கொண்ட ஜப்பான் நாட்டில் விடுதலை ஜனநாயக கட்சியின் தலைவர் சின்சோ அபே தற்போதைய பிரதமராக இருந்து வருகிறார். இவருடைய பதவிக்காலம் இன்னும் இரண்டு ஆண்டு இருக்கும் நிலையில் பிரதமர் திடீரென தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் இந்த தேர்வு தற்போது நடைபெற்றுள்ளது.

ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் சின்சோவுக்கு சாதகமாக உள்ளது. அவருடைய கட்சி சுமார் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சியான ஜப்பான் ஜனநாய கட்சியும் தேர்தலில் தங்களது வேட்பாளர்களை இறக்கியுள்ளது. ஜப்பானில் இதுவரை எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளின்படியே தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த முறையும் அபேயின் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என்று கூறப்படுகிறது.

Leave a Reply