இவானா டிரம்ப் கணவருக்கு திடீரென ஏற்பட்ட நெருக்கடி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் மகளின் கணவர் ஜோர்ட் குஷ்னர் அவர்களுக்கு திடீரென அந்தஸ்து குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் இவானாவும் அவரது கணவரும் அதிபர் டிரம்ப் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
டிரம்ப் அமெரிக்க அதிபராக போட்டியிட்டபோது அவரது பிரச்சாரம் முழுவதையும் கவனித்து கொண்டவர் அவரது மருமகன் ஜோட் குஷ்னர்தான். எனவே டிரம்ப் அதிபரானதும் அவருக்கு முக்கிய பொறுப்புகளை டிரம்ப் வழங்கியிருந்தார்
இந்த நிலையில் தற்போது அவரது அந்தஸ்து திடீரென குறைக்கப்பட்டுள்ளது. அவருடைய அந்தஸ்தை குறைக்க என்ன காரணம் என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை. இதுகுறித்து ஜேரட் குஷ்னரின் வழக்கரிஞர் அப்பே லோவெல் கருத்து தெரிவிக்கையில், “ஜேரட் குஷ்னரின் அந்தஸ்தை குறைத்து இருப்பது, ஜனாதிபதி அவருக்கு ஒதுக்கித்தருகிற எந்த ஒரு பணியையும் செய்கிற திறனை பாதிக்காது” என கூறினார்.