விஜய்யின் ‘கத்தி’ பட பாணியில் போராட்டம் நடத்திய ஜாட் இன மக்கள்

விஜய்யின் ‘கத்தி’ பட பாணியில் போராட்டம் நடத்திய ஜாட் இன மக்கள்
jat protest
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’ படத்தில் விவசாயிகளின் போராட்டம் வெளியே தெரிய வேண்டும் என்பதற்காக குடிநீர் குழாயில் உள்ளே மக்கள் உட்கார்ந்து கொண்டு போராட்டம் செய்வார்கள். இந்த காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதே பாணியில் தற்போது ஜாட் இனத்தவர்கள் தங்கள் இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இடஒதுக்கீடு குறித்த போராட்டத்தை நடத்தி வரும் ஜாட் இன மக்கள் உச்சகட்டமாக நேற்று டெல்லியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் முனக் என்ற கால்வாயின் மதகுகளை அடைத்தும், சேதப்படுத்தியும் ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு செல்லும் குடிநீரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் டெல்லிக்கு செல்லும் தண்ணீர் பாதிக்கப்பட்டதால் டெல்லி நகரமே அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் ‘கத்தி’ படத்தைபோல் அரசு வேடிக்கை பார்க்காமல் அதிரடியாக ராணுவத்தை அனுப்பி தண்ணீர் கால்வாயை மீட்டது. இதனால் தற்போது நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாகவும், டெல்லிக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply