மஞ்சள் காமாலைக்கு உகந்த இளநீர்

fresh-coconut-water-fb-copy

இயற்கையின் வரப்பிரசாதம் இளநீர். எண்ணற்ற மருத்துவ பலன்கள் இதில் உள்ளன. செவ்விளநீர், பச்சை இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்க இளநீர் மிகவும் உதவுகிறது. மஞ்சள் காமாலைக்கு இளநீர் சிறந்த மருந்து. இதனை தவறாமல் குடித்தால், அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்தாகும்.

வெப்பத்தைத் தணித்து, உடலில் நீர்ச்சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்ய இளநீர் உதவுகிறது. சிறுநீரகத்தை சுத்திகரிப்பதோடு , ஜீரணக்கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்பு, வழுவழுப்புத் தன்மை காலரா நோயாளிகளுக்கு நல்ல மருந்தாக உதவுகிறது. காலையில் இளநீர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. இது உடலுக்கு ஊக்கமும் சத்தும் தரும் ஆரோக்கியமான மருந்து. தோல் பளபளப்பாக சிவப்பாக மாற தினமும் இளநீரில் குடிக்க வேண்டும்.

இது ரத்தம் சுத்தம் அடையவும் கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. இத்துடன் தோல், முடி, நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றன. இளநீர் இளமையைக் காக்கும் அரிய பானமாகும். இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது உணவு எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும். சர்க்கரைச் சத்துடன் தாதுப்பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன.

இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது. தாகத்தைத் தீர்க்க உடலில் சக்தியைப் புதுப்பிக்க, தினமும் ஓர் இளநீர் குடிக்கலாம் உங்கள் வாழ்நாள் முழுக்க அழகான தோற்றத்துடன், நலனை நீடிக்கும் சக்தியாக இளநீர் உள்ளது. இயற்கையின் வரப்பிரசாதமான இளநீரில், எண்ணற்ற மருத்துவ பலன்கள் இருந்தாலும், தீமைகளும் உள்ளது. இது மட்டுமா பொட்டாசியம், சோடியம் மற்றும் கலோரிகள் அதிகம் இருக்ககூடியது இளநீர் . தடகள விளையாட்டு வீரர்களுக்கு இது ஏற்றதல்ல. கார்போஹைட்ரேட் குறைந்த அளவிலும், பொட்டாசியம் அதிக அளவிலும் இருப்பதே இதற்கு காரணம்.

இளநீரில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் இருப்பதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும். எனவே, நீரிழிவு நோயாளிகள் தினமும் அருந்தாமல் இருப்பதே நலம். மேலும் சோடியம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். அனைவரும் நம்பிக் கொண்டிருக்கும் இளநீர் உடல் எடையை குறைத்து விடும் என்பதே. ஆனால் அது உண்மையல்ல, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவாது. குறிப்பாக அலர்ஜியால் பாதிக்கபட்டவர்கள் குடிக்கக்கூடாது. இளநீர் மரத்திலிருந்து கிடைக்கும் பானம், இதனால் சில சமயம் அலர்ஜி உள்ளவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். – See more at: http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=3529&cat=500#sthash.wRgM0Qrd.dpuf

Leave a Reply