ஜெயலலிதா பிரதமர் ஆக காங்கிரஸ் சம்மதம். டெல்லியில் அதிரடி திருப்பம்.

jaya pm

நடந்துவரும் நாடாளுமன்ற தேர்தலின் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதா முழு மெஜாரட்டியுடன் ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை கைப்பற்றுவது கடினம் என்றுதான் கூறிவருகின்றன. இந்நிலையில் 3வது அணி ஆட்சி அமைக்க வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸும் மனதளவில் 3வது அணியை ஆதரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டது.

சமீபத்தில் சோனியா தலைமையில் ரகசிய ஆலோசனை நடந்தபோது, ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்து ஆராய்ப்பட்டதாம். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து மோடி பிரதமர் ஆகிவிட்டால், அவரை குறைந்தது 10 வருடங்களுக்கு அசைக்க முடியாது என்பதால், அவரை எப்படியாவது வரவிடாமல் தடுக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்காக 3வது அணியில் உள்ள ஒருவரை பிரதமர் வேட்பாளாராக்கி அவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆதரவு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

3வது பிரதமர் வேட்பாளர்களில் காங்கிரஸின் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பவர் ஜெயலலிதாதான் என்கிறது ஒரு தகவல். இதுகுறித்து பேசுவதற்காக காங்கிரஸின் பெண் பிரதமர் ஒருவர் ஜெயலலிதாவிடம் சந்திப்பு நடத்தியதாகவும், அதன்பின்னன்ரே ஜெயலலிதாவின் கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பாரதிய ஜனதாவின் எதிர்ப்பு பேச்சு வெளிவந்ததாகவும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா பிரதமர் ஆக, மம்தா தனது விருப்பத்தைச் சொல்லிவிட்டார். முலாயம் சிங்கை தடுக்க வேண்டுமானால் ஜெயலலிதாவை ஆதரிக்க மாயாவதி தயங்க மாட்டார். நவீன் பட்நாயக், எப்போதும் ஜெயலலிதாவின் விசிறி. ‘தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆக என்னுடைய ஆதரவு உண்டு’ என்று ஜெகன்மோகனும், சந்திரசேகர ராவும் முன்வரலாம். இப்படி 3வது அணித்தலைவர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் பெயரை முன்னோக்கி நிறுத்துவதால் அவர் பிரதமராக வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம் என்கிறது டெல்லி வட்டாரங்கள். ஆனாலும் என்ன நடக்கவுள்ளது என்பதை மே 16ஆம் தேதிதான் முடிவு செய்யவேண்டும்.

Leave a Reply