ரஜினி – கமல் சந்திப்பால் நாட்டில் எதுவும் நடக்கப் போவதில்லை: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
நேற்று கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் சந்தித்து பேசியது தமிழக அரசியலை பெரும்புயலை கிளப்பிவிட்டது. இந்த சந்திப்புக்கு பின்னர் கமல், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த போதிலும், இன்றைய நாளிதழில் கமல்-ரஜினி சந்திப்பே பிரதான செய்தியாக வெளியாகியுள்ளது
இந்த நிலையில் இந்த சந்திப்பை அரசியல் கட்சிகள் குறிப்பாக திமுக உற்று நோக்கி வருகிறது. இதுவரை தனக்கு போட்டியாக அதிமுக மட்டுமே இருந்த நிலையில் தற்போது புதிய போட்டியாளர்களையும் திமுக சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் சற்றுமுன் கமல்-ரஜினி சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: ரஜினி – கமல் சந்திப்பால் நாட்டில் எதுவும் நடக்கப் போவதில்லை. இந்த சந்திப்பு ரூஸ்வெல்ட் – வின்ஸ்டன் சர்ச்சில் சந்திப்பதை போல பெரிதுபடுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.