முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தேர்தலில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. ஜெயலலிதா உள்பட இதுவரை மொத்தம் 37 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 15 சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. வரும் 13ஆம் தேதி வேட்புமனுக்கள் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். அன்று மாலையே இந்த தொகுதியில் யார் யார் இறுதி வேட்பாளர்கள் என்பது தெரிந்துவிடும்.
திமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக, பாஜக ஆகிய முக்கிய கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போட்டியிடும் ஒரே அரசியல் கட்சி வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேர்தல் தொடர்பான புகார் அளிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளும்படி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள்:
மாவட்ட தேர்தல் அதிகாரி கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 044 28525340, பேக்ஸ் எண்- 044 28515341
பொதுப் பார்வையாளர் தொலைபேசி எண் – 044 28515342, கைபேசி எண் – 94450 71056
செலவின பார்வையாளர் தொலைபேசி எண் – 044 28515343, கைபேசி எண் – 94450 71057