சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ராஹாரா சிறையில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூன்று பேரும் ஒரே அறையில் இருக்கிறார்கள் என சிறைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெய்சிம்ஹா நேற்று மாலை பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ”பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். காலை, மதியம், மாலை என 3 வேளையும் மருத்துவர்கள் ஜெயலலிதாவை பரிசோதித்து வருகின்றனர்.
இன்று காலை முதல், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூன்று பேரும் ஒரே அறையில் இருக்கின்றனர். இன்று மாலை வரை அவர்கள் மூன்று பேரும் ஒரே அறையில்தான் இருப்பார்கள்” என்றார்.