குன்ஹா தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா ஐகோர்ட்டில் ஜாமீன் மனுத் தாக்கல். நாளை விசாரணை

jayaசொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதா உள்பட் நான்கு பேர்களும் இன்று கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகுய 4 பேர் தரப்பில் விடுமுறைகால நீதிமன்ற ஊழியர்கள் முன்பு இன்று மனு  தாக்கல் செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த மனுவில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தண்டனையை நிறுத்தி வைத்துவிட்டு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் ஜெயலலிதா தனியாகவும் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். இத்துடன் தீர்ப்பு நகலையும் அவர் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் மனு  தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் விடுமுறைகால நீதிமன்ற நீதிபதி ரத்னகலா முன்பு நாளை விசாரணை வருவதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவுக்காக பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜராகி வாதாடுவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply