ஜெயலலிதாசொத்துக்குவிப்பு வழக்கு. இன்று பெங்களூர் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு ஆவணங்கள் தாக்கல்.

jayalalithaஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு வழக்கின் ஆவணங்கள் இன்று பெங்களூர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வருமானத்து அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கில் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா ஜாமின் பெற்றுள்ளார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியபோது, இந்த வழக்கின் மேல்முறையீட்டு ஆவணங்களை 3 மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி, கர்நாடக ஐகோர்ட்டில் இன்று ஜெயலலிதா சார்பில் மேல்முறையீட்டு ஆவணங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. கடந்த 2 மாதங்களாக ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருடைய மூத்த வழக்கறிஞர் குமார், வழக்கறிஞர்கள் செந்தில், அசோகன், ஆர்.அன்புக்கரசு, திவாகர், செல்வக்குமார் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழு மேல்முறையீட்டு வழக்கு குறித்த ஆவணங்களை நகல் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக, 4 பேருக்கும் தலா 43 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் புத்தக வடிவில் தயாரிக்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்த ஆவணங்களை எல்லாம் பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் உள்ள பதிவுத் துறையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பதிவுத் துறை அதிகாரிகள் அவற்றை சரிபார்த்து அந்த ஆவணங்களுக்கு எண்கள் வழங்கிய சில நாட்களில் ஜெயலலிதாவின்  மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply