சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வரின் ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 6ஆம் தேதி வரை ஒத்திவைத்த நிலையில் திடீர் திருப்புமுனையாக இன்று இந்த மனுவை மீண்டும் விசாரணை செய்ய உள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.
ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விடுமுறைகால நீதிபதி ரத்னகலா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது இந்த மனுமீதான விசாரணையை அக்டோபர் 6ஆம் தேதிக்கு நீதிபதி ரத்னகலா ஒத்திவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கிற்காக ஆஜராக வந்த பிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியின் அதிரடி நடவடிக்கை காரணமாக ஜெயலலிதாவின் மனுக்களை நாளையே விசாரிக்க வேண்டும் எனக் கோரி மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று நேற்று க்கல் செய்யப்பட்டது.
கர்நாடக ஐகோர்ட்டின் பதிவாளர் தேசாய் அவர்களிடம், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட கர்நாடக ஐகோர்ட் பதிவாளர் தேசாய், இன்று இந்த வழக்கை விசாரிக்க உள்ள மனுக்களின் பட்டியலில் சேர்த்துள்ளார். நீதிபதி ரத்னகலாவே இம்மனுவை மீண்டும் விசாரிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கின் அதிரடி திருப்பமாக கர்நாடக ஐகோர்ட் தலைமை பதிவாளர் பட்டேலை, தீர்ப்பு கொடுத்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா நேற்று மாலை திடீரென நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடந்ததாகவு இந்த சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது..
ஜெயலலிதா ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரை நீதிபதி மைக்கேல் டி குன்ஹா சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.