சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா வழக்கு இன்று விசாரணை.

jayaஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகாரன் ஆகிய நான்கு பேர் மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஜாமின் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கியதுடன், வழக்கு தொடர்பான ஆவணங்களை டிசம்பர் 18ம் தேதிக்குள் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனை அடுத்து கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்து  ரசீது பெற்றது.

இதனை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply