திமுகவினரை சோகத்தில் ஆழ்த்திய தீர்ப்பு. களையிழந்தது கோபாலபுரம்

dmkஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை ஆவலுடன் கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கையில் தீவிரமாக இறங்கவிருந்த திமுக தலைவர்கள் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக வந்துள்ளதால் சோர்வு அடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இன்று காலை 9 மணி முதலே திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தின் முன்னர் திமுகவின் முக்கிய தலைவர்களும் தொண்டர்களும் குவிந்தனர். சரியாக 11மணிக்கு தீர்ப்பு வெளிவந்ததும் சோகமடைந்து அங்கருந்து கலைந்து சென்றனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு நிச்சயமாக பாதகமாகத்தான் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த திமுகவினர் எதிர்பார்ப்பு சுக்குநூறாகியது.

தீர்ப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கருணாநிதியை மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சந்தித்து ஆலோசனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply