முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மாநாடு மூன்று நாள் நடைபெறுகிறது. இது குறித்து தலைமைசெயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு, வருகிற டிசம்பர் 11, 12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டின் முதல் நாள் 11ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த கூட்டமும், 12ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கான கூட்டமும், மற்றும் 13ம் தேதி காவல் துறை அதிகாரிகளுக்கான கூட்டமும், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை, பத்தாவது மாடியிலுள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.