ஜெயலலிதாவின் பிரச்சார திட்டம் அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று அதிரடியாக 227 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். மீதி ஏழு தொகுதிகளை சிறுசிறு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கினார். இந்நிலையில் அடுத்தகட்டமாக தேர்தல் பிரச்சார திட்டத்தையும் தற்போது அறிவித்துள்ளார்.
இதன்படி ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 9ஆம் தேதி சென்னை ஆர்.கே.நகரில் இருந்து தொடங்குகிறது. இரண்டு நாட்கள் சென்னையில் பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதா பின்னர் ஏப்ரல் 11ஆம் தேதி கடலூர் மண்டலத்திலும், 13ஆம் தேதி தேதி தருமபுரி மண்டலத்திலும், 15ஆம் தேதி விருதுநகர் மண்டலத்திலும், 18ஆம் தேதி காஞ்சிபுரம் மண்டலத்திலும், 20ஆம் தேதி சேலம் மண்டலத்திலும், 23ஆம் தேதி திருச்சி மண்டலத்திலும் அவர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.
மேலும் ஏப்ரல் 25-ம் தேதி புதுச்சேரி மாநிலத்திலும், 27-ல் மதுரை மண்டலத்திலும், மே 1-ல் கோவை மண்டலத்திலும், மே 3-ல் விழுப்புரம் மண்டலத்திலும், 5-ல் ஈரோடு மண்டலத்திலும், 8-ல் தஞ்சை மண்டலத்திலும், 10-ல் நெல்லை மண்டலத்திலும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் ஜெயலலிதா, மே 12-ல் வேலூர் மண்டலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து தனது பிரசாரத்தை முடிக்கிறார்.