முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றதால் கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகிய இருவரும் கடந்த 1991, 1992 1993 ஆகிய ஆண்டுகளில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றும், இந்த இருவரும் பங்குதாரர்களாக இருந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனமும் வருமான வரி செலுத்தவில்லை என்றும் கூறி, வருமான வரித்துறை உதவி ஆணையாளர் சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், வருமான வரிச் சட்ட விதிகளின்படி, தாங்கள் செலுத்த வேண்டிய வருமான வரித் தொகையை அபராதத்துடன் சேர்த்து செலுத்த தயாராக இருப்பதாக வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரலுக்கு, ஜெயலலிதா, சசிகலா மற்றும்ம் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவை வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, ஜெயலலிதா மற்றும் சசிகலா அபராதத்ஹ்டுடன் கூடிய வருமான வரி தொகை ரூ.1.99 கோடி செலுத்தி விட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.