முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இன்று விடுதலையானதும் பலருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்துள்ள நிலையில் ஒருசிலருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக திரைத்துறையில் உள்ள ஒருசிலர் தங்கள் அதிர்ச்சியை வெளியே காட்டிக்கொள்ள முடியாமல் மனம் புழுங்கிக்கொண்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்தபோது பட்டாசு வெடித்தும், ஸ்வீட் கொடுத்தும் கொண்டாடிய ஒரு பெரிய நடிகரின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தன்னைத்தானே கூறிக்கொண்டிருக்கும் அந்த பெரிய நடிகர் தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் ஒன்றில் நடித்து வருகிறார். தற்போது மீண்டும் ஜெயலலிதா முதல்வர் ஆவது உறுதியாகிவிட்ட நிலையில் அந்த படம் சிக்கலின்றி வெளிவருமா? என்ற சந்தேகத்தை பலர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.