முதல் சட்டசபை கூட்டம் கூடியது. ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் எம்.எல்.ஏக்களாக பதவியேற்பு
தமிழக சட்டமன்றத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களும் பதவியேற்று கொண்டனர். அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தேர்தலுக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. உடல்நிலை காரணமாக திடீர் மரணம் அடைந்த திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவேல் மறைவுக்கு முதலில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து எம்.எல்.ஏக்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
எம்.எல்.ஏ.க்கள் பதவிப்பிரமாணம் முடிந்த பின்னர் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் ஜூன் 3ம் தேதி சட்டசபை கூடவுள்ளதாகவும் அன்றைய தினம் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நடைபெறும் என்றும் அதன்பின்னர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் முழு அளவிலான சட்டசபை கூட்டத் தொடருக்கான தேதி முடிவு செய்யப்படும் என்று சட்டசபை வட்டாரங்கள் கூறுகின்றன.
சட்டப்பேரவைக்கு வந்த கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், கடமை உள்ளதால் சட்டப்பேரவைக்கு வந்தேன் என்றும், தேர்தலுக்கு எதிரான ஆணையம் போல் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றும் தெரிவித்தார்.