சபாநாயகரை மேயர் என அழைத்த திமுக உறுப்பினர். கைதட்டி சிரித்த முதல்வர்

சபாநாயகரை மேயர்’ என்று அழைத்த திமுக உறுப்பினர். விழுந்து விழுந்து சிரித்த முதல்வர்

jayalalithaதமிழக சட்டசபையில் இன்று உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் பேசிய முன்னாள் சென்னை மேயரும், சைதாப்பேட்டை எம்.எல்.ஏவுமான மா.சுப்பிரமணியன் பேசியபோது சென்னை மாநகர் பிரச்சினைகள் குறித்தே பேசினார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, ‘‘திமுக உறுப்பினர் பேசுவதைக் கேட்டால் இது தமிழக சட்டப்பேரவையா? அல்லது சென்னை மாநகராட்சி மன்றமா? என்ற சந்தேகம் எழுகிறது. அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் உள்ள பிரச்சினைகளை பேச வேண்டிய உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கையில் சென்னை பற்றி மட்டுமே பேசுகிறார்’’ என்று கூறினார்.

அதற்கு பதிலளிக்க எழுந்த மா.சுப்பிரமணியன் சபாநாயகர் பி.தனபாலை நோக்கி மாண்புமிகு மேயர் அவர்களே!! என அழைத்து பேசத் தொடங்கினார். சபாநாயகரை மேயர் என அழைத்ததும், அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் சிரிப்பலையால் அவை அதிர்ந்தது. அதனைக் கேட்ட முதல்வர் தனது கைகளைத் தட்டி சிரித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், ‘‘திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன் தமிழகம் முழுவதும் உள்ள பிரச்சினைகளை பேச வேண்டும்’’ என்று கூறினார்.

Leave a Reply