கருணாநிதிக்கு வயது 93ஆ, 63ஆ? மு.க.ஸ்டாலினி தடுமாற்றத்தை ரசித்த ஜெயலலிதா

கருணாநிதிக்கு வயது 93ஆ, 63ஆ? மு.க.ஸ்டாலினி தடுமாற்றத்தை ரசித்த ஜெயலலிதா

jayaநேற்று சட்டமன்றத்தில் சபாநாயகர் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டமன்ற மரபுப்படி சபாநாயகரை அவரது இருக்கையில் அமர வைத்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பின்னர் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார்.

அப்போது இந்த நாள் சபாநாயகர் பதவியேற்ற நாள் மட்டுமின்றி தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த தினம் அது என்ற தகவலை சட்டப்பேரவை பதிவுகளில் பதியச் செய்தார். அப்போது பேசிய ஸ்டாலின் கருணாநிதியின் வயதை 93 என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக, 63வது பிறந்த தினம் என்று மாற்றி குறிப்பிட்டார். ஸ்டாலினின் இந்த தடுமாற்றத்தை அவருக்கு எதிரே உட்கார்ந்திருந்த முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதியின் வயதைக் கேட்டதும் பலமாகச் சிரித்தார்.

பேச்சை முடித்துவிட்டு உட்கார்ந்த மு.க.ஸ்டாலினிடம் இதுகுறித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூறிய பின்னர் உடனே ஸ்டாலின் சுதாரித்து எழுந்து, சபாநாயகரின் அனுமதியைப்பெற்று, தான் குறிப்பிட்டிருந்த கருணாநிதியின் வயதை மாற்றி அதை 93 என்று பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

Leave a Reply