ஜெயலலிதா சிகிச்சை செலவு ரூ.6 கோடி: அப்பல்லோவில் கட்டியது அதிமுக
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சைக்கான செலவுத்தொகையை அப்பல்லோ மருத்துவமனையில் செலுத்தப்பட்டதாக அதிமுக அறிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் சாதாரண காய்ச்சல் மற்றும் நீரிழப்பு என்றும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் நாள் ஆக ஆக வெறும் அறிக்கைள் மட்டுமே வெளிவந்தது. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த விவரங்களின் உண்மைத்தன்மை குறித்து பொதுமக்களும் எதிர்க்கட்சியினர்களும் சந்தேகம் அடைந்தனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி, உடல்நிலை மோசமடைந்து ஜெயலலிதா காலமானார்.
இந்த சூழலில் ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு ஆன செலவை கணக்கிட்டு, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அந்த தொகை ரூ.6 கோடி, அதிமுக சார்பில் மருத்துவமனையில் செலுத்தப்பட்டது. அதனை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அணியைச் சேர்ந்த வைகைச் செல்வன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.