தேர்தல் ஆணையம் அறிவிப்பை தொடர்ந்து ஜெயலலிதா பெயர் நீக்கம்.

website
தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வர் பதவியையும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் இழந்தார்.

இருப்பினும், தமிழக அரசு துறை அலுவலகங்கள், விளம்பர பலகைகள், திட்ட வளாகங்கள் ஆகியவற்றில் ஜெயலலிதாவின் பெயர் மற்றும் படங்கள் நீக்கப்படாமல் இதுநாள் வரை இருந்தது.

இந்நிலையில், ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் அதிகாரி நேற்று அறிவித்ததை தொடர்ந்து , தமிழக அரசின் இணைய தளத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் இருந்து ஜெயலலிதா பெயர் நீக்கப்பட்டுள்ளது. 139வது இடத்தில் தொகுதியின் பெயர் ஸ்ரீரங்கம் என குறிப்பிட்டு, அந்த தொகுதிக்கான எம்.எல்.ஏ. பெயர் குறிப்பிடப்படாமல் உள்ளது.

Leave a Reply