டாஸ்மாக் கடைக்கு தீ வைத்ததில் காயமடைந்த ஊழியருக்கு ரூ.50,000 நிதியுதவி. முதல்வர் அறிவிப்பு

டாஸ்மாக் கடைக்கு தீ வைத்ததில் காயமடைந்த ஊழியருக்கு ரூ.50,000 நிதியுதவி. முதல்வர் அறிவிப்பு

jayalalithaதமிழகமெங்கும் பூரண மதுவிலக்கு தேவை என போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என நடந்து வரும் நிலையில் சமீபத்தில் தி.நகரில் ஒரு டாஸ்மாக் கடைக்கு சில மர்ம நபர்கள் தீவிஅத்தனர். டாஸ்மாக் கடைக்கு தீ வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை மாவட்டம், கிண்டி வட்டம், தியாகராய நகர், தெற்கு போக் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை கடையில் 12.8.2015 அன்று, சில மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், பணியில் இருந்த ரங்கசாமி என்பவரின் மகன் பழனிவேல் என்பவர் தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.

இந்த சம்பவத்தில் தீக்காயமடைந்த டாஸ்மாக் ஊழியர் பழனிவேலுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க சென்னை மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் டாஸ்மாக் ஊழியர் பழனிவேல் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். பழனிவேலுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50,000/- ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்

Leave a Reply