ரூ.100 கோடி அபராதமும் ரத்து. உற்சாக வெள்ளத்தில் அதிமுக தொண்டர்கள்

jaya releaseஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்த கர்நாடக உயர்நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தையும் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஜெயலலிதா மட்டுமின்றி, சசிகலா, இளவரசி, சுதாகரான்  ஆகிய மூன்று பேர்களுக்கும் விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டதாக நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜெயலலிதாவை இன்னும் சற்று நேரத்தில் தமிழக முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பார் என்றும், ஜெயலலிதா இன்னும் சற்று நேரத்தில் சென்னை போயஸ் கார்டனில் பத்திரிகையாளர்களை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் உறுதிப்படுத்தபடவில்லை.

Leave a Reply