ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்ற திமுக
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை சற்றுமுன்னர் சபாநாயகர் தனபால் அவர்கள் சட்டமன்றத்தில் திறந்து வைத்தர். இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் சார்பில் வில்சன் என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அக|ற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் புகைப்படம் வைப்பது குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் புகைப்படம் வைத்துள்ளது முறையற்றது என்றும் வில்சன் தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நேரில் ஆசீர்வாதம் வழங்கியதை போல் உணர்கிறேன் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.