ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் பவானி சிங்கை நீக்க கோரிய திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்யும் என சுப்ரீம் கோர்ட் அதிரடியாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த அமர்வின் விவரத்தை இன்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. இதன்படி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால், பிரபுலா சி.பந்த் உள்ளிட்ட 3 பேர் கொண்ட சிறப்பு அமர்வு ஏப்ரல் 21ம் தேதி இந்த வழக்கை விசாரணை செய்யவுள்ளது.
முன்னதாக அன்பழகன் மனு மீதான விசாரணையில் தீர்ப்பு அளித்த இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3 நீதிபதிகள்அமர்விற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.