அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு வழங்க ஏப்ரல் 15 வரை சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் விசாரணை நடைபெற்று விரைவில் தீர்ப்பு வழங்கயிருக்கும் நிலையில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று இறுதி தரப்பு வாதம் முடிவடைந்தது.
முதலில் பேராசிரியர் அன்பழகன் சார்பிலும், பின்னர் ஜெயலலிதா சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. பிறகு, வழக்கின் தீப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
இதனிடையே, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 15ஆம் தேதி வரை வழங்கக் கூடாது என்று இடைக்கால தடை பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.