ஜெயலலிதாவின் சொத்துக்கள் தெலுங்கானாவிற்கு? புதிய வழக்கு தாக்கல்

ஜெயலலிதாவின் சொத்துக்கள் தெலுங்கானாவிற்கு? புதிய வழக்கு தாக்கல்

ஐதராபாத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் தெலுங்கானா மாநில அரசே ஏற்று நிர்வகிக்க வேண்டும் என்று ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கரிப் கைடு அமைப்பின் தலைவர் பார்கவி என்பவர் இன்று ஐதராபாத் ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவ்து:

ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஐதராபாத் பேட்பஷிராபாத் பகுதியில் ஜி.டி. மெட்லா, ஹோம்பள்ளி ஆகிய இடங்களில் 4 ஏக்கர், 7 ஏக்கர் பரப்பளவில் ஜெ.ஜெ. கார்டன் என்ற பெயரில் உள்ள சொத்துக்களையும், ஐதராபாத் ஸ்ரீ நகர் காலனியில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஒரு வீட்டையும் தெலுங்கானா அரசே ஏற்று நிர்வகிக்க வேண்டும். அந்த சொத்துக்களில் யாரும் சொந்தம் கொண்டாட அனுமதிக்க கூடாது என்று உத்தரவிடவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply