அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா தரப்பு மற்றும் அரசு தரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் சுப்பிரமணிய சுவாமியின் எழுத்துபூர்வமான வாதத்தை வரும் 11ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
க்ர்நாடக ஐகோர்ட்டில் கடந்த 38 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்பு நடைபெற்றது.
அரசுத் தரப்பு வழக்குரைஞர் பவானி சிங், ஜெயலலிதா தரப்பு மூத்த வழக்குரைஞர் பி.குமார், சசிகலா தரப்பு வழக்குரைஞர் மணிசங்கர் ஆகியோர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கின் மூல புகார்தாரர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி, தனது எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்யவில்லை. சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் ஆஜரான அவரது வழக்குரைஞர் பவன்சந்திரசேகர் ஷெட்டி, சுப்பிரமணியன் சுவாமி தனது எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய ஒரு வார காலம் அவகாசம் கேட்டார்.
இதுகுறித்து நீதிபதி, பவானி சிங்கிடம் விவரம் கேட்டபோது அதற்குப் பதிலளித்த பவானி சிங், தனக்கு இனிமேல் சுப்பிரமணியன் சுவாமியின் உதவி எனக்குத் தேவையில்லை என்று கூறியதை அடுத்து சுப்பிரமணிய சுவாமிக்கு கால அவகாசம் தர மறுத நீதிபதி குமாரசாமி மறுத்துவிட்டார். மேலும் சுப்பிரமணியன் சுவாமி வரும் மார்ச் 11ஆம் தேதிக்குள் அதாவது நாளைக்குள் தனது எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்யுமாறு சுப்பிரமணியன் சுவாமிக்கு உத்தரவிட்டார்.